fbpx

பேச முயன்ற ஒரு தலை காதலன்! கண்டுகொள்ளாமல் சென்ற மாணவி! ஆத்திரத்தில் வெறிச்செயல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு எழுதி விட்டு வந்த பிளஸ் டூ மாணவியை அறிவாளால் வெட்டிவிட்டு இளைஞர் ஒருவர் தப்பியோடியதால் அப்பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழ செக்காரகுடியைச் சார்ந்தவர் கருப்பையா இவரது மகள் தங்கமாரி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். இந்த மாத துவக்கத்தில் பிளஸ் 2 இறுதித் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்நிலையில் தனது கடைசி தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வந்திருக்கிறார் தங்கமாரி.

அவர் தேர்வெழுதி முடித்துவிட்டு வெளியே வந்ததும் அதே பகுதியைச் சார்ந்த சோலையப்பன் தங்கமாரியிடம் பேச முயன்றதாக தெரிகிறது. ஆனால் தங்கமாரி அவரை விட்டு விலகி சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சோலையப்பன் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து தங்கமாரியின் முகம், கை, கால், வயிறு என எல்லா இடங்களிலும் சரமாரியாக குத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த தங்கமாரியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவத்தில் தப்பியோட முயன்ற சோலையப்பனைய பகுதி மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் சோலையப்பன். நீண்ட நாட்களாகவே இவர் தங்கமாரியை ஒருதலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இறுதி தேர்வு எழுத வந்த மாணவியை சந்தித்து பேச வந்திருக்கிறார் சோலையப்பன் அவரிடம் பேசாமல் நிராகரித்ததால் ஆத்திரத்தில் வெறிச்செயலில் ஈடுபட்டதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

Baskar

Next Post

தொடர்ந்து காதலிக்க மறுத்த பெண்! தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்ற காதலன் தப்பி ஓட்டம்!

Mon Apr 3 , 2023
சேலம் அருகே காதலிக்க மறுத்த பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் செங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சி பகுதியைச் சார்ந்த மாற்றுத்திறனாளி விவசாயியான முருகேசன் மற்றும் ஜெயலட்சுமி தம்பதியினருக்கு விஜய் என்ற மகனும் உள்ளனர். முருகேசனின் இரண்டாவது மகளான ரோஜா ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி ஏ தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ஆத்தூர் […]

You May Like