fbpx

எனது மனைவி திருநங்கையா? மருத்துவ பரிசோதனைக் கோரி நீதிமன்றத்தை நாடிய கணவர்..!! என்ன விவகாரம்?

மத்திய அரசு மருத்துவமனையில் தனது மனைவியின் பாலினத்தை பரிசோதிக்க டெல்லி காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ”எனது மனைவில் திருமணத்துக்கு முன்பு பாலின மாறுபாடு குறித்து எதுவும் கூறவில்லை. அவர், என்னை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அவரது பாலின மாறுபாடு குறித்து மறைத்தது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்” என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக அறிக்கை சமர்ப்பித்த வழக்கறிஞர் அபிஷேக் குமார் செளதரி, ”தனிநபரின் பாலினம் அல்லது பாலின அடையாளம் என்பது அவர்களின் தனிப்பட்ட விஷயம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். எனினும், திருமணம் என்று வரும்போது இருவரும் ஒவ்வொருவரைப் பற்றி தெரிந்துகொள்வது அவர்களின் உரிமை. ஆரோக்கியமான திருமண வாழ்க்கையைப் பேணுவதற்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள இரு தனிநபர்களின் வாழ்க்கைக்கான அடிப்படை உரிமைகளை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு முன், நியாயமான விசாரணை மற்றும் உண்மைகளைத் தீர்மானிப்பதற்கு தனக்கு உரிமை உண்டு என்று மனுதாரர் வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து மனுதாரர் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், உரிய பரிசோதனையின் மூலம் உண்மையை கண்டறிவது மனுதாரரின் உரிமை என குறிப்பிட்டார்.

மேலும், பரிசோதனையில், மனைவி, பெண் எனத் தகுதி பெறவில்லை என்றால், மனுதாரர் பராமரிப்பு செலவை அளிக்கவோ அல்லது குடும்ப வன்முறை மற்றும் வரதட்சனை சட்டங்களின்கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவோ ​​தேவையில்லை என வலியுறுத்தி உள்ளது. மனுதாரர் முன்பு சிவில் நடைமுறைச் சட்டம் பிரிவு 151-ன் கீழ் தனது மனைவியின் பரிசோதனைக்காக மருத்துவ வாரியம் அமைக்கக் கோரியிருந்தார். ஆனால், அவரது மனு விசாரணை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

Read more ; 8 நாட்களில் 100க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்..!! – வதந்திகளை பரப்பும் ‘X’ கணக்குகள் முடக்கம்!!

English Summary

A man has petitioned the Delhi High Court for directives to the Delhi Police to test his wife’s gender at a Central Government Hospital.

Next Post

பெண்களே..!! இனி நீங்களும் நிலம் வாங்கலாம்..!! ரூ.5 லட்சம் மானியம்..!! தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்..!!

Wed Oct 23 , 2024
Minister Kayalvizhi Selvaraj announced the new schemes for women in the legislative session held last June.

You May Like