உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 2026 போட்டிக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்க அனுமதி கோரி மல்யுத்த வீரர் வினேஷ் போகத் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) கடந்த செப்டம்பர் 7 அன்று வெளியிட்ட தகுதி வரம்புகள் குறித்த சுற்றறிக்கையின்படி, குறிப்பிட்ட போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் மட்டுமே தகுதிச் சுற்றில் கலந்துகொள்ள முடியும். இந்த விதியை ஒருவருக்காக மட்டும் தளர்த்த முடியாது […]

பெற்றோரின் சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற மகனின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், அவர் தனது தாயின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோருமாறு அதிரடியாக அறிவுறுத்தியுள்ளது. தாய் மற்றும் மகனுக்கு இடையிலான சொத்துத் தகராறு தொடர்பான வழக்கில், தங்களது பாசத்தின் காரணமாக மகனும் அவனது மனைவியும் வீட்டின் முதல் தளத்தில் வாடகை இன்றி வசிக்க பெற்றோர் அனுமதித்துள்ளனர். ஆனால், நாளடைவில் அந்தச் சொத்தை தங்களின் பெயருக்கு […]

நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், உயர் நீதிமன்றங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 1,100-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் செய்திகளை அனுப்பிய நபரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர், சீனிவாஸ் லூயிஸ் (47) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்தவர் ஆவார். சீனிவாஸ் லூயிஸ் முதுகலை பட்டம் பெற்றவர் என்றும், பெங்களூரைச் சேர்ந்தவர் என்றும் காவல்துறை […]

திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, உடலுறவு வைத்துக் கொண்ட பிறகு,ஜாதக பொருத்தம் இல்லை என்ற காரணத்தை சொல்லி திருமணம் செய்ய மறுப்பது, ஏமாற்றி பாலியல் உறவு கொண்ட குற்றம் தான் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில், சம்மந்தப்பட்ட ஆணுக்கு “திருமணத்திற்கு எந்த தடையும் இல்லை; ஜாதகப் பொருத்தம் உட்பட எந்த பிரச்சனையும் இல்லை” என்று மீண்டும் மீண்டும் உறுதி அளித்து, ஒரு பெண்ணுடன் நீண்ட காலமாக உடல் […]

நட்பை ஒரு பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யவோ, அடைத்து வைக்கவோ அல்லது தாக்கவோ உரிமமாக கருத முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு முன்ஜாமீன் வழங்கவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.. பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் பிரிவு 4 உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் முன்ஜாமீன் கோரி அந்த நபர் […]

தனது கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ள உறவில் இருக்கிறார் என்று சந்தேகம் எழுந்தால், அதனை உறுதிப்படுத்த, தனது கணவரின் இருப்பிட விவரங்கள், அழைப்புத் தரவு பதிவுககள கோரலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவை தீர்ப்பளிக்கும் செயல்முறைக்கு உதவும் புறநிலை பதிவுகள் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம்தனது கணவரின் கள்ளக் காதலியின் இருப்பிட விவரங்களையும், கணவரின் இருப்பிட விவரங்களையும், கணவரின் அழைப்பு விவரப் பதிவை […]

பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு விவரங்களை டெல்லி பல்கலைக்கழகம் வெளியிட தேவையில்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தகைய தகவல்கள் “தனிப்பட்ட தகவல்களின்” கீழ் வரும் என்றும், அதை வெளியிடுமாறு மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தது. கல்விப் பதிவுகள் பொதுப் பதவியில் இருப்பவர்களுக்கும் கூட தனிப்பட்ட தகவல்களாகும் என்றும், அவற்றை வெளியிடுவதில் எந்த பொது நலனும் இல்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும் “ஒரு பொது […]

ரூ. 200 கோடி பண மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரிய நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. ரூ.200 கோடி பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான வழக்கில் தனக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யுமாறு பெர்னாண்டஸ் கோரியிருந்தார். ஜாக்குலின் பெர்னாண்டஸ், பணமோசடி தடுப்புச் சட்டம், 20202-ன் திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி, பணமோசடி குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும், குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானத்தையும் […]