fbpx

“அத்தை கிட்ட பேசாதன்னு சொன்னா கேக்க மாட்டியா” ?? மாமியாரின் கள்ளதொடர்பை பற்றி தெரிந்த ஆத்திரத்தில் மருமகன் வெறிச்செயல்!

மாமியாருடன் கள்ளத்தொடர்பிலிருந்த நபரை மருமகன் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் திருவள்ளூர் அருகே பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் சோழவரத்தைச் சார்ந்தவர் முத்துகிருஷ்ணன் வயது 60. இவர் பால் பண்ணையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கும் எடப்பாளையம் பிள்ளையார் தெருவை சார்ந்த எஸ்தர்(42) என்பவருக்கும் கள்ள தொடர்பு இருந்திருக்கிறது. இதன் காரணமாக எஸ்தரின் வீட்டிற்கு முத்துக்கிருஷ்ணன் அடிக்கடி வந்து சென்றிருக்கிறார். எஸ்தரின் வீட்டிற்கு அருகே அவரது இளையமகள் தீபிகா அவரது கணவர் மணிகண்டனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று முத்துகிருஷ்ணன் எஸ்தர் வீட்டிற்கு வந்து அவரிடம் பேசியிருக்கிறார்.

அப்போது வீட்டிற்கு எதிரில் அமர்ந்து இளநீர் சாப்பிட்டுக் கொண்டிருந்த மணிகண்டன் என் அத்தையிடம் ஏன் பேசுகிறாய்? என கேட்டிருக்கிறார். இது தொடர்பாக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் கோபமடைந்த மணிகண்டன் இளநீர் வெட்டும் கத்தியை எடுத்து முத்துகிருஷ்ணனின் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்று இருக்கிறார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த முத்துக்கிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மணிகண்டனை தேடி வருகின்றனர். பொதுவாக மருமகன் கள்ளத்தொடர்பிலிருந்து அதனை மாமியார் கண்டிக்கும் சம்பவங்களை தான் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இங்கு மாமியாரின் கள்ளத்தொடர்பை கண்டித்த விவகாரம் கொலையில் முடிந்திருக்கிறது.

Rupa

Next Post

திடீரென அறுந்து விழுந்த கோபுர ராட்டினம்! பயங்கர விபத்தில் 11 பேர் படுகாயம்!

Thu Mar 23 , 2023
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் கேபிள் அறுந்து கோபுர ராட்டினம் விபத்துக்குள்ளானதில் 11 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தப் பொருட்காட்சியைக் காண தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு பொழுதுபோக்கிற்கு என ராட்டினங்கள் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று பொருட்காட்சி வழக்கம் போல் தொடங்கி செயல்பட்டுக் கொண்டிருந்தது. மக்களும் உற்சாகமாக கேளிக்கைகளில் ஈடுபட்டுக் […]

You May Like