fbpx

இன்னும் இந்த பொருள செய்றாங்களா.? திருச்சியில் ஒருவர் படுகாயம்! காவல்துறை தீவிர விசாரணை!

திருச்சி பெரியார் நகரைச் சார்ந்த ஒருவருக்கு மாஞ்சா நூல் பட்டம் கழுத்தில் சிக்கியதால் படுகாயம் ஏற்பட்டது . இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரிமாதிர்ச்சியை ஏற்படுத்தியது பட்டம் விடும் காலம் தொடங்கி விட்டாலே மாஞ்சா நூலும் அதனால் ஏற்படும் விபத்துகளும் தொடர் கதையாகி விடும். மாஞ்சா நூலில் பட்டம் விடுவதால் சாலையில் செல்பவர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் உயிருக்கியே ஆபத்து ஏற்படும் சூழல்கள் இருந்து வருவதால் மாஞ்சா நூலை வைத்து பட்டம் விடுவதற்கு தமிழக காவல்துறை தடை விதித்து வந்திருக்கிறது. எனினும் மக்கள் காவல்துறையின் உத்தரவையும் மீறி ஆங்காங்கே இதுபோன்று மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விடுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது. இது போன்ற அசம்பாவிதங்களையும் குற்றங்களையும் தவிர்ப்பதற்கு காவல்துறை எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் சட்டத்தை மீறுபவர்கள் மீறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்நிலையில் திருச்சியைச் சார்ந்த வெங்கடேஷ் என்பவர் பெரியார் நகர் பாலம் அருகே இவர் சென்று கொண்டிருந்தபோது பட்டம் விடும் மாஞ்சா நூல் ஒன்று அவரது கழுத்தில் சிக்கிய அறுத்தது . இதனைத் தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் பலத்த காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார் வெங்கடேஷ். மாஞ்சா நூலிற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். பொதுமக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் ஆபத்து விளைவிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் அரசாங்கம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கும் எனவும் தெரிவித்தனர்.

Baskar

Next Post

பேருந்து நிலையம் அருகே கழுத்தறுக்கப்பட்டு பாதி நிலையில் எறிந்த இளம் பெண் சடலம்! ஐந்து தனிப்படை அமைத்து விசாரணை!

Mon Apr 3 , 2023
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலையோரம் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேவுள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது சித்தேரி. இதன் கரை பகுதியில் நேற்று மாலை ஆடு மாடுகளை மேய்ப்பதற்காக சென்றவர்கள் அங்கே 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரின் சடலம் பாதி எரிந்தும் எரியாமலும் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சடைந்தனர் இது […]

You May Like