fbpx

பக்கத்து வீட்டுக்காரருடன் காதல்! மனைவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த கணவன்!

திருமணத்தை மீறிய உறவிலிருந்த மனைவியை தனியார் ஊழிய நிறுவனர் படுகொலை செய்துள்ள சம்பவம் பெங்களூருவில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கொல்கத்தாவைச் சார்ந்த சேக் சுகைல் என்பவர் பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் தப்ஸின் பாபியான் என்பவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் பெங்களூருவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சுகைல் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார் இதனால் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது பெற்றோர் வீட்டிற்கு செல்ல வேண்டுமென தெரிவித்திருக்கிறார் தப்ஸின். இதனைத் தொடர்ந்து அவரை சமாதானப்படுத்தி கொல்கத்தா அழைத்துச் சென்றிருக்கிறார் சுஹைல். இந்நிலையில் பெங்களூருவில் இருந்தபோது தப்சீனுக்கும் அவரது அண்டை வீட்டுக்காரரான நதிம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் திருமணத்தை தாண்டி உறவாக தொடர்ந்திருக்கிறது. இதனை அறிந்த வகையில் பலமுறை கண்டித்திருக்கிறார்.

இந்நிலையில் கொல்கத்தாவிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு பெங்களூரு வந்த தப்ஸின் நதிமுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டரை வயதில் குழந்தை ஒன்று உள்ளது. தற்போது மனைவியிருக்கும் இடத்தை அறிந்த சுகைல் அவரிடம் வந்து தன்னோடு வாழுமாறு அழைத்திருக்கிறார். இதற்கு அவர் மறுக்கவே ஆத்திரமடைந்த சுகைல் தான் வைத்திருந்த கத்தியால் தப்ஸின் கழுத்தை அறுத்து படுகொலை செய்து இருக்கிறார். அந்தக் குழந்தையையும் தாக்கி காயப்படுத்த முயன்றிருக்கிறார். இச்சம்பவம் தொடர்பாக ஹெண்ணூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தொடர்ந்து அவர்கள் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சுகைல் கைது செய்யப்பட்டார் .

Rupa

Next Post

அடிக்கடி வீட்டிற்கு வந்த மகளின் தோழிக்கு விரித்த வலை! தொடர் பாலியல் வன்புணர்வு! கணவன் மற்றும் மனைவி கைது!

Wed Mar 22 , 2023
திருச்சியில் மகளின் தோழியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கணவன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாநகரைச் சார்ந்தவர் சுரேஷ். பைனான்ஸியரான இவர் பெயிண்டிங் காண்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். இவரது மகள் அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து வருகிறார். இவரது மகளுடன் படிக்கும் தோழி ஒருவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து […]

You May Like