மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆண் பெண் இருவரின் சடலமும் ஒரே வீட்டில் காணப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவிற்கு தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹரிதேவ்பூரில் காவல் நிலையத்திற்கு வந்த தொலைபேசியையடுத்து அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற காவல்துறை அங்கிருந்த இருவரது சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது. மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது காவல்துறை. இரு சடலங்களும் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக விசாரணையை துவக்கிய காவல்துறைக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. இந்நிலையில் காவல்துறையினர் அந்த குடியிருப்பு சென்று பார்த்த போது ஆண் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய படியும் பெண் சடலம் ஒன்று தரையிலும் இருந்திருக்கிறது. இதில் தொங்கியபடி இருந்த ஆண் சடலம். ரவீந்திர சவுராசியா என்பதும் தரையில் கிடந்த சடலமானது ஷகுப்தா பர்வீன் என்பதும் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் அந்த வீட்டிலிருந்து ஒரு தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றி இருக்கின்றனர் அந்த கடிதத்தில் என் சாவுக்கு காரணம் இந்த பெண்தான் இவரால் தான் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது என எழுதி இருக்கிறது. இதனை வைத்து யோசித்துப் பார்க்கும்போது ரவீந்திர சவுராசியா அந்தப் பெண் சாக்குப்தா பர்வினை கொலை செய்துவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் இந்த கொலை கள்ளக்காதல் விவகாரத்தால் நடந்திருக்க கூடும் எனவும் காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவீந்திர சவுராசியாவின் மனைவி வீட்டில் இல்லாத நேரம் இந்த சம்பவம் நடந்திருப்பதால் இதற்கு கள்ளக்காதல் தான் காரணம் என காவல்துறை அந்தக் கோணத்திலும் விசாரணையை நடத்தி வருகிறது.
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதில் வேறு யாருக்கும் தொடர்பிருக்குமா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகிறது. சம்பவம் நடந்த தினத்தன்று ரவீந்திர சௌராஷியாவின் மனைவி வீட்டிலிருந்து வெளியே சென்று இருக்கிறார். பின்னர் அவர் திரும்பி வந்த போது தான் அவரது கணவர் சவுராசியா தூக்கில் தொங்கி இருக்கிறார் தரையில் சாகுப்தா பர்வீன் பிணமாக இருந்திருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே காவல்துறையை தொடர்பு கொண்டு தற்போது காவல்துறையினருத் திவீரமாக விசாரணை செய்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.