கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் சியாஹி(22) என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த நாகர்கோவில் பகுதியில் கல்லூரியில் ஒன்றில் படிக்கும் மாணவிக்கு சியாஹியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த பழக்கத்தினால் பலமுறை மாணவியும், சியாஹியும் பேசி கொண்டும் , புகைப்படமும் எடுத்துக் கொண்டும் வந்துள்ளனர். இதனை தொடர்ந்து மாணவி சில நாட்களாக சியாஹியுடன் பழகுவதை திடீரென குறைத்துள்ளார்.
இந்த செயலால் கோபமடைந்த சியாஹி, நாம் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் என்று கூறி மாணவியை மிரட்டியுள்ளார். இதனால் பயந்த மாணவி புகைப்படங்களை தந்து விடும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் குழித்துறை பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். இதனால் மாணவி அங்கு சென்ற போது மாணவிக்கு சியாஹி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
மாணவி இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவான சியாஹியை தீவிரமாக தேடி வருகின்றனர்.