fbpx

மனித உறுப்புகளுடன் சிக்கிய கும்பல்..!! ஜெயலலிதா படம், அதிமுக கொடியுடன் வந்த காரில் மர்மம்..!! தேனியில் அதிர்ச்சி..!!

அதிமுக கொடியுடன் வந்த காரில் மூளை, கல்லீரல், நாக்கு உள்ளிட்ட உறுப்புகளுடன் 3 பேருடன் காவல்துறையினர் பிடித்துள்ளனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகரில் மாந்திரீக கும்பல், மக்களிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுகுமாரி தலைமையில் நேற்று முன்தினம் நள்ளிரவு உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஜெயலலிதா படம் மற்றும் அதிமுக கொடியுடன் வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், நாக்கு, கல்லீரல், மூளை உள்ளிட்ட மனித உறுப்புகள் மற்றும் எலுமிச்சை, சூடம், முட்டை ஆகியவை இருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், இவை அனைத்தையும் பறிமுதல் செய்து, காரில் இருந்தவர்களை உத்தமபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த விசாரணையில், காரில் இருந்தவர்கள் மதுரை அய்யனார்கோட்டையை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி (39), கமுதியைச் சேர்ந்த டேவிட் பிரதாப் சிங் (40), பசும்பொன் கிராமத்தை சேர்ந்த முருகன் (65) என்பது தெரியவந்தது.

இவர்களுடன் உத்தமபாளையம் பாறைமேடு தெருவைச் சேர்ந்த மந்திரவாதி ஜேம்ஸ் (52) என்பவர் தொடர்பில் இருந்துள்ளார். ஜேம்ஸ் மீது ஏற்கனவே மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜேம்ஸ் இவர்கள் 3 பேருக்கும் அறிமுகமாகி, நள்ளிரவில் பூஜை செய்தால் பணம் கொட்டோ, கொட்டென்று கொட்டும் என்றும், ஒரே இரவில் பணக்காரராக மாறிவிடலாம் என்று கூறியுள்ளார். கேரள மாநிலம் வண்டிப் பெரியாறில் உள்ள ஒருவரிடம் பணம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதன்படி, இவர்கள் ரூ.2.50 லட்சத்தை அவரிடம் கொடுத்துள்ளனர். அவர் பதிலுக்கு ஒரு சூட்கேஸ் தந்து, இதனை திறக்காமல் மந்திரவாதி ஜேம்ஸிடம் தர வேண்டும் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில் உத்தமபாளையம் வந்ததாக 3 பேரும் கூறி உள்ளனர். காரில் கைப்பற்றப்பட்ட உறுப்புகள் மனித உறுப்புகளா, அல்லது ஆடு, மாட்டின் உறுப்புகளா என்பதை அறிய மதுரையில் உள்ள தடயவியல் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். அதன் முடிவு வந்தவுடன் இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது. மந்திரவாதி ஜேம்ஸ் பிடிபட்டால் மட்டுமே ஏமாற்றப்பட்ட பணம் எவ்வளவு என தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

பாஸ்போர்ட் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு டிஜிலாக்கர் கட்டாயம்..!! இன்று முதல் அமல்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Sat Aug 5 , 2023
இந்தியாவில் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் பாஸ்போர்ட் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு டிஜிலாக்கர் (DigiLocker) என்னும் ஆப் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பாஸ்போர்ட் அப்ளை செய்வதற்கு பல்வேறு நடைமுறைகள் மற்றும் விதிகள் கடைபிடிக்கப்படுகிறது. அதில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது ஆவணங்கள் சரிபார்ப்பு தான். ஏனென்றால், நீங்கள் பாஸ்போர்ட் பெறுவதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் ஆவணங்களில் ஏதாவது ஒரு இடத்தில் சிறிய பிழை இருந்தாலும் அதற்காக நாள்கணக்காக அலைய வேண்டியிருக்கும். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் மட்டுமே […]

You May Like