அர்ஜென்டினா நாட்டில் தனது இரட்டை குழந்தைகளுடன் காவல் நிலையம் சென்ற பெண் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. அர்ஜென்டினா நாட்டைச் சார்ந்தவர் சோபியா. இவருக்கு சில நாட்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அந்தக் குழந்தைகளுக்கு வேலண்டீன் மற்றும் லொரென்ஸோ பெயர் வைத்திருக்கிறார். இந்நிலையில் இவர் தனது இரட்டை குழந்தைகளை அடையாளம் காண மிகவும் சிரமப்படுவதால் அதற்கு ஒரு வழியை கண்டுபிடிப்பதற்காக இரண்டு குழந்தைகளையும் காவல் நிலையம் அழைத்துச் செல்ல உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்தப் பதிவில் எனது இருட்டையர்களை நாளை காவல் நிலையம் அழைத்துச் செல்ல இருக்கிறேன். அங்கு சென்று அவர்களின் கைரேகையை எடுத்து தான் அவர்களை நான் யார் என்று அடையாளம் காண வேண்டும் என பதிவிட்டு இருந்தார்.
மேலும் குழந்தைகள் இருவரும் போட்டோவில் அடையாளம் காண்பதற்கு எளிதாக இருந்தாலும் நேரில் அவர்களை அடையாளம் காண்பதற்கு மிகவும் கடினமாக இருப்பதாக தெரிவித்த அவர் அவர்கள் இருவரும் வளர்ந்து வரும் வரை அவர்களது கைரேகைகளை எடுத்து வைத்து அவர்களை அடையாளம் காண போவதாக அந்த பதிவில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தனது இரட்டை குழந்தைகளையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றிருக்கிறார் சோபியா. ஆனால் அவர் எதிர்பார்த்தது போலவே அவர்களின் கைரேகைகளை சேகரிக்க முடியவில்லை. இதன் காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளார் அவர். இரட்டை குழந்தைகளுடன் காவல் நிலையம் செல்லப் போகிறேன் என இவர் பதிவிட்ட ட்விட்டர் செய்தி இணையதளத்தில் வைரலாகி இருக்கிறது.