கர்நாடக மாநிலம், வடக்கு பெங்களூரில் எஸ்ஆர் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இருக்கிறது. இந்த குடியிருப்பில் ஒரு பெண் பல் டாக்டர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது கணவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். அவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடு உள்ளது.
இதனால் அந்த குழந்தையின் தாயார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அந்த குழந்தையின் தாய் அவரது நான்கு வயது மகளை நான்காவது மாடி பால்கனியில் இருந்து தூக்கி எறிந்து இருக்கிறார். குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி மிகவும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாயின் மனநலம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று, மூத்த காவல்துறை அதிகாரி ஸ்ரீனிவாஸ் கவுடா தெரிவித்துள்ளார்.