மகாராஷ்டிரா மாநில பகுதியில் 36 வயது பெண் ஒருவர் அவரது உறவினரான 28 வயது வாலிபரை காதலித்து வந்த நிலையில், தன்னுடைய 15 வயது மகளை கட்டாயப்படுத்தி அந்த நபருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்து இருக்கிறார்.
இதனை தொடர்ந்து அதற்கு மறுப்பு சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். சம்மதிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி திருமணத்திற்கு வலுக்கட்டாயமாக சம்மதிக்க வைத்துள்ளனர்.
சென்ற நவம்பர் 6 ஆம் நாள் , கோவில் ஒன்றில் தான் காதலித்து வந்த நபருக்கும், மகளுக்கும் திருமணம் நடத்தி வைத்தது மட்டும் இல்லாமல், அவருடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று மகளை கட்டாயப்படுத்தியுள்ளார். இதனை சக தோழியிடம் கூறிய போது உண்மை தெரிந்து ஒரு சமூக ஆர்வலரால் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து காவல் நிலையம் அந்த தாய் மற்றும் அவரின் காதலரை பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) சட்டம் மற்றும் குழந்தை திருமணத் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்துள்ளனர்.