கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் முதுகுவலி, வயிற்று அசௌகரியம் உள்ளிட்ட சில பாதிப்புகள் ஏற்படுவது இயல்பானது. இருப்பினும், முதுகின் கீழ்ப்பகுதியில் கடுமையான வலி, வயிற்றின் ஒரு பக்கத்தில் தொடர்ந்து வலி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அல்லது சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது. இவை சிறுநீரகக் கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். சிறுநீரகத்தில் தாதுக்கள் மற்றும் உப்புகள் படிவதால் உருவாகும் […]

குடும்பத்துக்குள் நீடிக்கும் சந்தேகம், கோபம், கருத்து வேறுபாடு ஆகியவை சில நேரங்களில் எதிர்பாராத விபரீதங்களுக்கு காரணமாகிவிடுகின்றன. அதிலும், ஏற்கனவே குற்றப் பின்னணி கொண்ட ஒருவர் குடும்ப பிரச்சினையின் மையமாக மாறும்போது, அதன் முடிவு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமையக்கூடும். ராஜஸ்தானில் 11 குற்ற வழக்குகளை எதிர்கொண்ட பெண் ஒருவர் காணாமல் போன சம்பவமும் அப்படியொரு மர்மத்தை ஏற்படுத்தியது. 15 மாதங்களுக்குப் பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், கணவரும் மகனும் சேர்ந்து […]

தெலங்கானா மாநிலம் ஹனம்கொண்டா மாவட்டத்தில் தாயை கொலை செய்ததாக 20 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். காசிப்பேட்டை டி.ஜி.ஐ.எல் காலனியில் நடந்த இந்த சம்பவம், குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சினை விபரீதமாக முடிந்ததை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. உதயஸ்ரீ (40) என்பவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், அப்பகுதியில் விசாரணையைத் தொடங்கினர். அங்கு கிடைத்த […]

கர்நாடக மாநிலம் வணகெரே மாவட்டத்தில் 45 வயது பெண் ஒருவர் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 36 வயது நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டவுன் சேகரப்பா பகுதியைச் சேர்ந்த நாகரத்னா (45), மூன்று குழந்தைகளின் தாய். அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (36) என்பவருடன் அவருக்கு பழக்கம் இருந்துள்ளது. நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கம் […]

தெலங்கானாவில் பெண்களை முன்கூட்டியே கண்காணித்து, அவர்களிடம் இருக்கும் பணம், நகை உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொண்டு, பின்னர் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் தாய் மற்றும் அவரது மைனர் மகன் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். சித்திப்பேட்டையில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கை விசாரித்தபோது, இதேபோன்று நடைபெற்ற மற்றொரு கொலைச் சம்பவத்திலும் இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை நகரின் ராமக்காபேட்டை பகுதியில் உள்ள வயல்வெளியில் கடந்த 8-ம் […]

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் லூர்து குமார். இவருக்கு 24 வயதான ரெபேக்கா என்ற மகள் உள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, ரெபேக்காவிற்கும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 36 வயதான பாகப்பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. பாகப்பிரகாஷ், பழக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், மதுபான பார் ஒன்றிலும் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு பிரதீஸ்வரி (4), பிரணிதா (2), பிரகிதா (2) […]

சமூகத்தில் ஒழுக்கச் சீர்கேடுகள், வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சிறார் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதாக பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். இதற்கு பல்வேறு சமூக, குடும்ப மற்றும் கல்வி சார்ந்த காரணங்கள் இருப்பதாகவும் விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக, குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோர்களின் அணுகுமுறையும், பள்ளிகளில் ஒழுக்கம் கற்பிக்கும் சூழலும் மாறிவிட்டதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர். குழந்தைகள் தவறு செய்தாலும் கண்டிப்பதற்கோ, திருத்துவதற்கோ தயக்கம் காணப்படுவதால், தவறுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும், விமர்சனங்களை எதிர்கொள்ளும் […]

சமூக வலைதளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து நடைபெறும் உருவக்கேலி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நடிகை குஷ்புவின் மகள்கள் அவந்திகா மற்றும் குஷியை இழிவுபடுத்தும் பதிவுகளுக்கு நடிகையும் அரசியல்வாதியுமான ராதிகா சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இணையத்தில் பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மனிதர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளார். தான் இந்த பதிவை மிகுந்த வேதனையுடனும் […]

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள பர்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ரன்வீர் சிங். இவருக்கு முகேஷ், ரவீந்திரா என்ற இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், இவரது இரண்டாவது மகன் ரவீந்திராவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஃபதேஹாபாத் பகுதியில் உள்ள ரன்வாய் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் முடிந்துள்ளது. ஆனால், திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் […]

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டம், இல்லாதூர் கிராமத்தை சேர்ந்தவர் 32 வயதான நிரோஷா. இவரது கணவர் திருவள்ளூர் மாவட்டம் மணவூரைச் சேர்ந்த 36 வயதான கார்த்திக். இருவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், இவர்களுக்கு தற்போது 10 வயதான மகன் மற்றும் 6 வயதான மகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு […]