ரஷ்யாவில் உள்ள ஒரு பள்ளியில் இன்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துடன், 20 பேர் காயமடைந்ததாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள உட்முர்டியா (Udmurtia) என்ற மாகாணத்தில் தலைநகரான Izhevsk என்ற இடத்தில் இன்று துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது.. அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த காவலாளி ஒருவரையும், சில குழந்தைகளையும் கொன்றதாக கூறப்பட்டனர்.. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர்..
மேலும் அந்த மர்ம நபர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகவும், தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. மேலும் பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.. .
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார் என்பதும், அவர் எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 640,000 பேர் வசிக்கும் நகரமான இஷெவ்ஸ்க், மாஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 960 கிலோமீட்டர் (596 மைல்) தொலைவில் மத்திய ரஷ்யாவில் யூரல் மலைகளுக்கு மேற்கே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..