fbpx

வரலாறு காணாத புதிய உச்சம்.. தமிழ் புத்தாண்டில் பெண்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை….

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.45,760க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இதனால் தங்கம் விலை உயர்வதும், பின்பு குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது..

#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 44 உயர்ந்து ரூ.5,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.45,760-க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.20 உயர்ந்து ரூ.83க்கு விற்பனை செய்யப்படுகிறது..

மார்ச் 20ல் ஒரு சவரன் தங்கம் விலை, ரூ.44,640 ஆக இருந்தது.. பின்னர் மார்ச் 31-ல் ஒரு சவரன் தங்கம் ரூ.44,720க்கு விற்பனையானது.. ஏப்ரல் 5-ம் தேதி புதிய உச்சமாக ரூ. ரூ.45,520க்கு விற்கப்பட்டது.. இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு தினமான இன்று புதிய உச்சமாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ.45,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

Maha

Next Post

கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்த நபரை நம்பி ஹோட்டலுக்கு சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்….! கேரள போலீசார் அதிரடி நடவடிக்கை…..!

Fri Apr 14 , 2023
கேரளா மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூர் பகுதியை சேர்ந்தவர் முஹம்மது சுபைர்(36). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார். அவர் கூறியதை நம்பிய அந்த இளம் பெண்ணும் அவருக்கு சிறிது சிறிதாக 10 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். இந்த சூழ்நிலையில், கடந்த […]

You May Like