fbpx

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! தமிழ்நாட்டில் கனமழை..!! வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்..!!

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், வடக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் (இன்று) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தது. இது பருவமழையை உருவாக்கும் காரணியாக இருக்கும் என்பதால், தமிழ்நாட்டில் மழை தொடரும் என்றும், கடலோர பகுதிகளில் மாலை நேரங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தென்மேற்கு பருவமழை இந்த மாதத்துடன் நிறைவடையும் இநிலையில், இந்தியாவில் மழைக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (செப்.5) முதல் 8ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

இனி ”இந்தியா”கிடையாது..!! ஜி20 மாநாட்டிற்காக மத்திய அரசு செய்த காரியத்தை பாருங்க..!! அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்..!!

Tue Sep 5 , 2023
ஜி20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதில் பாரத் குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 20 நாடுகள் சேர்ந்த ஜி20 அமைப்பிற்கு, நடப்பாண்டில் இந்தியா தலைமை தாங்குகிறது. அதன்படி, வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்காக அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழ் தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த […]

You May Like