fbpx

மக்களே…! வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. 10-ம் தேதி முதல் கனமழை…!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வரும் 10-ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது. இதன் தாக்கத்தால் அங்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது இன்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, 11-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை – தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 10-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், வரும் 11-ம் தேதி மேற்கண்ட மாவட்டங்கள் (ராமநாதபுரம் நீங்கலாக) மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வரும் 12-ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 13-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழக மீனவர்கள் வரும் 11-ம் தேதி வரை ஆழ்கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

A new low pressure area has formed in the Bay of Bengal.. Heavy rains from the 10th

Vignesh

Next Post

பாம்புகள் பழிவாங்குமா?. இளம்பெண்ணை 11 முறை கடித்த கருப்புப்பாம்பு!. ஆபத்தான நிலையில் சிகிச்சை!

Sun Dec 8 , 2024
Snake: உத்தர பிரதேசத்தில் 5 ஆண்டுகளில் இளம்பெண்ணை கருப்புப் பாம்பு ஒன்று 11 முறை கடித்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படங்களில் வருவது போல் பாம்புகள் ஒருவரைப் பழிவாங்குவதும், அவரைப் பின்தொடர்வது நிஜ வாழ்க்கையில் சிலருக்கு ஏற்படுகிறது. இதனை பாம்புகள் பழிவாங்குவதாகவும் மக்கள் மத்தியில் நம்பிக்கையாக இருக்கிறது. இருப்பினும், அறிவியல் பூர்வமாக உறுதிசெய்யப்படவில்லை. இந்தநிலையில் உத்தரப்பிரதேசத்தில் 19 வயது இளம்பெண்ணை 5 ஆண்டுகளாக கருப்பு பாம்பு ஒன்று 11 முறை […]

You May Like