fbpx

முன்னதாகவே உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!! தமிழ்நாட்டில் கனமழை வெளுத்து வாங்கப்போகுது..!!

வடக்கு அந்தமான், அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

இதன் காரணமாக இன்று முதல் 29ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வடக்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 29ஆம் தேதி உருவாகுவதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 30ஆம் தேதி தாழ்வுப்பகுதி உருவாகும் என கணிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் முன்னதாகவே உருவாகிறது. இதனால், தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

அஜித் ஒரு ஃபிராடு..!! நடிக்கவே தெரியாது..!! தொப்பையை காட்டி ஆட மட்டும் தான் தெரியும்..!! பகீர் கிளப்பிய தயாரிப்பாளர்..!!

Tue Sep 26 , 2023
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரின் ரசிகர்கள் அடிக்கடி சண்டை போட்டாலும் தொடர்ந்து நண்பர்களாகவே தங்களது பணியில் பிசியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித், விஜய் பற்றி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, “அஜித் ஆரம்ப காலகட்டத்தில் என்னிடம் பணம் வாங்கி இருந்தார். சினிமாவில் நன்றாக வந்தபின் ஒரு படம் பண்ணித் தருகிறேன் என்று […]

You May Like