fbpx

கார்களுக்கு வந்தது புதிய கட்டுப்பாடு..!! விலையும் உயரும் அபாயம்..!! மத்திய அரசு அதிரடி..!!

சாலை பாதுகாப்பை அதிகரிப்பதற்காக மத்திய அரசு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது தேசிய தர கட்டுபாட்டு ஆணையத்தின் 5 நட்சத்திர குறியீடு பெறவேண்டும் என்றால், கார்களில் 6 ஏர்பேக்குகள் பொருத்தபடவேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இது கார் வாங்குவோர் மத்தியில் கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வாகன உபகரண உற்பத்தியாளர்கள் சங்கம் (ACMA) நடத்திய 63-வது ஆண்டு மாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்தாண்டு செப்டம்பரில், கட்டாய 6-ஏர்பேக் விதி 2023 அக்டோபர் முதல் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார். வாகனத் துறையால் எதிர்கொள்ளும் உலகளாவிய விநியோக சங்கிலி தடைகள், பெரிய பொருளாதார இழப்புகளின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, பயணிகள் கார்களில் (M-1 வகை) அக்டோபர் 1 முதல் குறைந்தப்பட்சம் 6 ஏர்பேக்குகளை கட்டாயப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்ததாக நிதின் கட்கரி கூறினார்.

இந்நிலையில், தேசிய தர கட்டுபாட்டு ஆணையத்தின் 5 நட்சத்திர குறியீடு பெற இந்திய தயாரிப்பு கார்கள் 6 ஏர்பேக்குகளை கொண்டு இயங்க வேண்டியது கட்டாயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களின் நம்பிக்கை ஏற்படுத்தினாலும், கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கூடுதல் செலவை அளிக்கிறது. இதனால், கார்களின் விலையும் கணிசமாக உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.

Chella

Next Post

திருப்பூர் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை, கொடூரமாக கொலை செய்து, பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபரால் பரபரப்பு....!

Tue Sep 19 , 2023
வர, வர தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் சரியில்லை பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை, குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று அரசியல் ரீதியாக ஆளுங்கட்சியை, பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். அவர்கள் சொல்வது உண்மைதான் என்பதைப் போல தமிழகத்தில் நாள்தோறும் பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருப்பூர் அருகே ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொடூரமான முறையில் கொலை செய்து, பின்பு அவரை தரதரவென்று, இழுத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் […]

You May Like