fbpx

எலிகளிடம் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா?… மனிதர்களுக்கு பரவினால் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எலிகளிடம் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இது மனிதர்களுக்கு பரவினால் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவில் அமெரிக்கன் சொசைட்டி ஃபார் மைக்ரோபயலாஜி என்ற அறிவியல் அமைப்பு நுண்ணுயிர் மற்றும் அதன் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்தொற்று குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறது. சமீபத்தில் இந்த அறிவியல் அமைப்பு கோவிட்-2 வைரஸின் ஆல்பா, டெல்டா மற்றும் ஓமிக்கிரான் வகைகள் எலிகளிடம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. வைராலஜிக்கல் ஆய்வுகள் மற்றும் மரபணு வரிசைமுறைக்காக 79 எலிகளிடமிருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யப்பட்ட போது 13 எலிகளில் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நியூயார்க் நகரத்தில் 8 மில்லியன் எலிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆராய்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்திய டாக்டர் ஹென்றி வான் கூறியதாவது: எங்களைப் பொறுத்தவரையில் எலிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்படக்கூடும் என்பதற்கான முதல் உறுதியான ஆதாரத்தை கொடுத்த ஆய்வு இதுதான். நியூயார்க் நகரில் உள்ள எலிகள் பல்வும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதால் இது விரைவில் வெவ்வெறு திரிபுகளில் மாறலா. இது மனிதகர்களுக்கு பரவினால் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kokila

Next Post

அசத்தல் அறிவிப்பு...! 2023 ஹஜ்‌ பயணத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...! முழு விவரம் உள்ளே...

Tue Mar 14 , 2023
ஹஜ்‌ பயணம்‌ மேற்கொள்ள விரும்பும்‌ இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. ஹஜ்‌-2023-ல்‌ ஹஜ்‌ பயணம்‌ மேற்கொள்ள விரும்பும்‌ இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. மத்திய ஹஜ்‌ குழு மூலம்‌ ஹஜ்‌ 2023-ற்காக விண்ணப்பிக்கும்‌ முறை 10.02.2023 முதல்‌ ஆன்லைனில்‌ தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பதாரர்கள்‌ ஆன்லைன்‌ விண்ணப்பத்தை இந்திய ஹஜ்‌ குழு இனையதளம்‌ மூலம்‌ அதாவது https://hajcommittee.gov.in/ என்ற இணையம்‌ வழியாக (அல்லது) மும்பை ஒந்திய ஹஜ்‌ […]

You May Like