கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இணைய வழி மூலம் செலுத்துவதற்கான புதிய இணையதளத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில், வீட்டுவரி மற்றும் கட்டணங்களை ஆன்லைன் மூலமே செலுத்தும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இனி வரும் காலங்களில் ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய எந்த கட்டணமாக இருந்தாலும் அதனை ரொக்கமாகப் பெறக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இணைய வழி மூலம் செலுத்துவதற்கான புதிய இணையதளத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.
இனி வரும் காலங்களில் பொதுமக்கள் அனைவரும் https://vptax.tnrd.tn.gov.in/என்ற இணையதளம் வாயிலாக வீட்டு உரிமையாளர்கள், பயனாளிகள் செலுத்த வேண்டிய வீட்டுவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி ஆகியவை இந்த இணையதளத்தில் வீட்டில் இருந்தபடியே செலுத்திக் கொள்ள முடியும். இந்த இணையதளத்தில், கட்டணங்கள், வரிகளை இணையவழி கட்டணம், ரொக்க அட்டைகள், கடன் அட்டைகள், யுபிஐ கட்டணம் போன்ற வழிகளில் செலுத்த முடியும்.