fbpx

கோடைக்காலத்திற்கு ஏற்ற நாவல் பழம்!… கஷாயம் வைத்து குடித்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு!… டிரை பண்ணுங்க!

நாவல் பழம் சாப்பிடுவதால் பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிவாரணமளிக்கிறது. இதன் மருத்துவ பயன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கோடை பருவத்தில் மாம்பழம், நுங்கு, வெள்ளரிக்காய், முந்திரிப் பழம், நாவல் பழம், தர்பூசணி உள்ளிட்ட காய், கனி வகைகள் நமக்கு கிடைக்கின்றன.கிராமப்புறங்களில் பள்ளி விடுமுறை நாட்களில் இந்தப் பழங்களுக்காக காடுகள் அல்லது சாலையோர நாவல் மரங்களை நோக்கி படையெடுக்கும் சிறுவர், சிறுமிகள் ஏராளம்.நாவல் பழம் நாவுக்கு இதமான சுவை தரும் என்பதோடு மட்டுமல்லாமல் அதில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன. குறிப்பாக வயிற்று வலி, நீரிழிவு, கீல்வாதம் போன்ற பிரச்சினைகளுக்கு பலன் தரக் கூடியது நாவல் பழங்கள் ஆகும்.

உடலில் புதிய செல்களைப் புதுப்பிக்கும் திறன் கொண்ட ஆன்டி-ஆக்ஸிடென்ட் நாவல் பழத்தில் அதிகமாக இருப்பதால் வெண்புள்ளி, அரிப்பு போன்ற தோல் நோய்களைக் குணப்படுத்தும். சிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள், நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன் அதன் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்களானது கரைந்துவிடும். பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவை. நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும். கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தும். குறிப்பாக மஞ்சள்காமாலையைக் குணப்படுத்தும். நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்குவதுடன், சிறுநீர்ப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

நாவல் பழத்தின் இலைகள் மற்றும் மரப்பட்டைகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கும். அதற்கு அவற்றை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்நீரை பருக வேண்டும். கர்ப்பப்பை தொடர்பான சிக்கல்கள், வெள்ளைப்படுதல், மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு போன்றவற்றைக் குணப்படுத்தும். நாவல் பழத்தைக் கஷாயம் வைத்துக் குடித்தால் வாய்வுத்தொல்லை விலகும். சர்க்கரை நோயாளிகள் இதன் விதைகளை நிழலில் உலர்த்தி சுமார் ஒரு கிராம் அளவு காலை – மாலை என சாப்பிட்டு வந்தால் படிப்படியாக சர்க்கரை நோய் குறையும்.

Kokila

Next Post

உடல் எடையை எப்படி குறைக்கிறதுனு கவலையா இருக்கா?... தினந்தோறும் 2 கப் குங்குமப்பூ டி குடியுங்கள்!...

Sun Apr 9 , 2023
உடல் எடையை குறைக்க குங்குமப்பூ தண்ணீர் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். குங்குமப்பூ தண்ணீரை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து இதில் பார்க்கலாம். அனைத்து விதமான சருமப் பராமரிப்பு பொருள்களிலும் குங்குமப்பூ உட்பொருளாக சேர்க்கப்பட்டு வருகிறது. குங்குமப்பூவை அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலம், பல்வேறு நன்மைகளை நம்மால் பெற முடியும். குங்குமப்பூவை சரியான அளவில், சரியான முறையில் எடுத்துக் கொள்ளும் போது, உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் […]

You May Like