கடந்த 2021 தேர்தல் சமயத்தில் திமுக மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் உரிமை தொகை திட்டத்தை அறிவித்தது. இதற்குப் பெண்களிடையே மிகச் சிறப்பான வரவேற்பு இருந்தது. தேர்தலிலும் இது நன்கு எதிரொலித்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் பல மாநிலங்களில் இதேபோன்ற உதவித் தொகை திட்டத்தை அறிவித்து வருகிறது.
அதன்படி, புதுச்சேரியில் 21 வயதுக்குமேல் 55 வயதுக்குள் இருக்கும், அரசின் எந்தவிதமான உதவித் தொகையும் பெறாத, வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்று 2022-23 பட்ஜெட் உரையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் புதுச்சேரி சட்டசபையில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி ரூ.13,600 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஏரளமான அறிவிப்புகளை வெளியிட்டார். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, 21 வயது முதல் 55 வயது வரை உள்ள குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2500 வழங்கப்படும் என தெரிவித்தார்.
* மேலும், மாநில சொந்த வருவாய் – ரூ.7,441.40 கோடியும், இதில் ரூ.11,624.72 கோடி வருவாய் செலவினத்திற்காகவும், ரூ.1975.28 கோடி மூலதின செலவினங்களுக்காவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* இதில் பேரிடர் மேலாண்மை நிதி மற்றும் மத்திய அரசின் நிதி ரூ.3,432.18 கோடியும், மத்திய அரசின் சாலை நிதி ரூ.25 கோடி, மத்திய அரசின் திட்டங்களின் கீழ் ரூ.400 கோடி, ரூ.2101.42 கோடி கடன் பெற மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
* அனைத்து விவசாயிகளுக்கும் மழைகால நிவாரணம் ரூ.2000 அறிவிக்கப்பட்டுள்ளது.
* புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் அனைத்து அட்டைகளுக்கும் 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும். சிவப்பு ரேஷன் அட்டைதார்களுக்கு தலா 20 கிலோ அரிசி, மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படும்.
* அரசு மற்றும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி வழங்கப்படும். வாரந்தோறும் 3 நாள் முட்டை இனி வழங்கப்படும்.
Read more: உலகையே உலுக்கிய உலகின் மிகப்பெரிய விமானக் கடத்தல்கள்..!! – முழு விவரம் உள்ளே