fbpx

சென்னையில் மழை நீர் கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு..!! – அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என குற்றசாட்டு

சென்னை அசோக் நகரில் சாலையோரம் இருந்த மழைநீர் கால்வாயில் விழுந்த நபர் உயிரிழந்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் சாலை எங்கும் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள். இந்தச் சூழலில் மழைநீர் வடிகால் கால்வாயிலில் தவறி விழுந்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அசோக் நகர் 100 அடி சாலை பகுதியில் மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக இந்த பணியானது நடைபெற்று வருகிறது. 8 அடி நீளம் 8 அடி அகலம் கொண்ட இந்த வடி நீர் கால்வாயில் இதுவரை தடுப்புகள் அமைக்கப்பட வில்லை. இந்த நிலையில் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஐயப்பன் என்பவர் தடுமாறி மழை நீர் கால்வாயில் விழுந்தார். மழைநீர் கால்வாயில் விழுந்து இறந்த ஐயப்பனின் உடலை மீட்டு மக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உரிய வழிமுறைகளை பின்பற்றி தடுப்புகள் அமைக்கப்படாததே உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். உயிரிழந்த நபர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

Read more ; பாராசிட்டாமல் உட்பட 50 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வி..!! – இந்திய மருந்துக் கூட்டணி விடுத்த எச்சரிக்கை

English Summary

A person died after falling into a roadside storm drain in Ashok Nagar, Chennai.

Next Post

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் ஏபி சிங் நாளை பதவி ஏற்பு..!!

Sun Sep 29 , 2024
Air Marshal AP Singh to Become New Indian Air Force Chief Tomorrow

You May Like