சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 3 தினங்களில் 39 சர்வதேச பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, துபாயில் இருந்த வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை விமான நிலையம் வந்த சேலம் பயணிக்கு கொரோனோ அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.

இன்று கோவை பன்னாட்டு விமான நிலையம் வந்த பயணிகளில் 9 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருவருக்கு தொற்று கண்டறிப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரி ஆவர். இதையடுத்து, அவரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.