fbpx

கோவிலுக்கு சென்ற பொதுமக்களை ஆபாசமாக திட்டிய நபர் கைது

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் பகுதியில் நேற்று வாலிபர் ஒருவர் போக்குவரத்துக்கு இடையூறாகவும், கோவிலுக்கு செல்லும் பொதுமக்களை ஆபாசமாக திட்டி கத்தியை காட்டி அச்சுறுத்துவதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் சென்றது.

இதனையடுத்து திருத்தணி சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை கண்டதும் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் தப்பியோட முயன்றார், இதனை கண்ட போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம் எள்ளூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (வயது 26) என்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆகாஷை போலீசார் கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர் ஆகாஷை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மலைக் கோவிலுக்கு செல்லும் வழியில் வாலிபர் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Maha

Next Post

வாகன ஓட்டிகளே..!! இனி தவறான பாதையில் சென்றால் டயர் பஞ்சர் ஆகிவிடும்..!! சூப்பர் திட்டம்..!!

Mon Aug 7 , 2023
இந்தியாவின் முதல் முறையாக சாலை விதிகளை மீறுவோருக்கு தண்டனை வழங்கும் வகையில், புதிய தொழில்நுட்பத்தை குஜராத் மாநில அகமதாபாத் காவல்துறை செயல்படுத்தியுள்ளது. இந்தியாவில் தினமும் ஏராளமானவர்கள் சாலை விதிமுறைகளை மீறி வருகின்றனர். அதில், ஒரு சாரார் இரு சாலைகள் இருந்தும் தவறான சாலைகளில் செல்வார்கள். அப்படி தவறாக செல்பவர்களுக்கு தண்டனை கொடுக்கும் வகையில், முள் படுக்கை கொண்ட தடுப்பு பலகை போடப்பட்டுள்ளது. இது சரியான பாதையில் செல்பவருக்கு எந்த ஒரு […]

You May Like