உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் ரயில் வருவதை கவனிக்காமல் ரயில்வே கேட்டை கடக்கும்போது, அதிவேகமாக வந்த ரயில், ரிக்ஷாவின் முன்பகுதியை இடித்து தூக்கி எரிந்தது. ரிக்ஷாவை இழுத்து வந்தவரும் தூக்கிவீசப்பட்டார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் உயிர்பிழைத்த அந்த நபர், உடனடியாக எழுந்து, தூக்கிவீசப்பட்ட தனது ரிக்ஷா வண்டியை நோக்கி நடந்து சென்றார். இந்த சம்பவத்தின் வீடியோ, அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், மூடப்பட்டிருந்த ரயில்வே கேட்டின் வழியாக அவர் ரயில் வருவதையும் கவனிக்காமல் குனிந்து செய்ததால், இந்த அசம்பாவிதம் நடந்ததை காட்டுகிறது. மூடப்பட்டிருக்கும் ரயில்வே கேட்டை கடப்பது உயிருக்கு ஆபத்தை என்பது தெரிந்தும் மக்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது இது போன்ற சம்பவங்களுக்கு வழிவகுக்கிறது.