பாகிஸ்தானில் ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் அவதூறான செய்தி பரப்பிய முஸ்லிம் நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தலகாங்கில் வசிக்கும் முஹம்மது சயீத் என்பவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு, சையத் முஹம்மது ஜீஷான் என்பவர் மீது புலனாய்வு அமைப்பில் புகாரளித்திருந்தார்.. அந்த புகாரில், சையத் முஹம்மது ஜீஷான் வாட்ஸ் அப் குரூப்பில், அல்லாவை பற்றி அவதூறான உள்ளடக்கத்தை இடுகையிட்டதாக தெரிவித்திருந்தார்.. இதையடுத்து சையது முகமது மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது..
இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம், “குற்றம் சாட்டப்பட்ட சையத் முஹம்மது ஜீஷான் குற்றவாளி என்று அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.. மேலும் அவருக்கு 1.2 மில்லியன் ரூபாய் ($4,300) அபராதமும், மொத்தம் 23 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. ஜீஷானின் செல்போனை பறிமுதல் செய்தது மற்றும் அதன் தடயவியல் பரிசோதனையில் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனினும் அவர் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்..
பாகிஸ்தானில் உள்ள மனித உரிமைகள் மற்றும் சட்ட உதவிக் குழுவான நீதி மற்றும் அமைதிக்கான தேசிய ஆணையத்தின் படி, கடந்த 20 ஆண்டுகளில் 774 முஸ்லிம்கள் மற்றும் பல்வேறு சிறுபான்மை மதக் குழுக்களைச் சேர்ந்த 760 பேர் அல்லாவை அவதூறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.