fbpx

இரயில் கழிவறையில் அமர்ந்து பயணம் செய்த புதுமணப்பெண்..!! கொதித்த நெட்டிசன்கள்!

இந்தியன் ரயில்வே உலகின் மூன்றாவது பெரிய ரயில்வே துறையாகும், அதில் இருந்து தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணம் செய்கிறார்கள், இந்திய ரயில்வே பயணிகளுக்கு வசதியான இருக்கைகள், ஏர் கண்டிஷனிங், கேட்டரிங் சேவைகள் மற்றும் கழிப்பறை வசதிகளை வழங்குகிறது. பேருந்து கட்டணத்தை விட இரயில் டிக்கெட் விலை குறைவு என்பதால் பெரும்பாலான பயணிகள் இரயில் போக்குவரத்தையே தேர்வு செய்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ரயிலின் உள்ளே இருக்கையில் அமர இடமில்லை என்பதால் தரையில் கழிவறை அருகே அமர்ந்து பயணம் செய்யும் மணப்பெண்ணின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு பரபரப்பான விவாதத்தை கிளப்பியுள்ளது. எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவிற்கு நெட்டின்கள் கருத்துக்களை பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்த ஒரு பயனர்,  “அன்புள்ள பெற்றோரே.. உங்கள் மகளுக்கு ஒழுக்கமான வாழ்க்கை முறையைக் கொடுக்க முடியாத ஒருவருக்குத் தயவு செய்து உங்கள் மகளை திருமணம் செய்து வைக்காதீர்கள்” எனக் கூறியுள்ளார். மற்றொரு பயனர், “இந்தியாவில் தனிப்பட்ட ஒருவரின் வருமான வரி செலுத்தும் தன்மையை வைத்தே செக்ஸ் மற்றும் திருமணம் போன்றவற்றை அனுமதிக்கப்பட வேண்டும். வருமானம் இல்லையென்றால், திருமணமும் கிடையாது” என சற்று ஆக்ரோஷமாக கருத்தை பதிவுசெய்துள்ளார்.

மற்றொரு பயனர், இந்திய ரயில்வே அமைச்சரை குற்றம் சாட்டி, “நன்றி அஸ்வினி வைஷ்ணவ், உங்களால்தான் ஒரு புதுமணப்பெண் உலகத்தரம் வாய்ந்த ரயில் வசதியைப் பெறுகிறார். நான் எப்போதும் உங்களுக்குக் கடமைப்பட்டிருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவிற்கு பதிலளித்த இந்திய ரயில்வே, உடனே உங்களின் PNR எண்ணை தருமாரும், விசாரித்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம் என பதிவிடப்பட்டுள்ளது. 

Read more ; டிசம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்..!! பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு..!!

English Summary

A photo of a bride sitting near a toilet in a train has gone viral on social media.

Next Post

டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுபவரா நீங்கள்..? உஷார்..!! 3 வயது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம்..!!

Mon Nov 25 , 2024
The tragic incident in which a 3-year-old girl died of suffocation after touching and eating a biscuit in her tea has caused a stir.

You May Like