fbpx

Gold Rate | நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி… ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,520 சரிவு..!!

கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று அதிரடியாக சரிந்து இருப்பது நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும், தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று அதிரடியாக சரிந்து இருப்பது நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

கடந்த திங்கள்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 352 குறைந்தது. ஆனால், மறுநாள் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிகள் வெளியாகியதால், தங்கம் விலை சவரனுக்கு ரூ. 632 அதிரடியாக அதிகரித்தது. இருப்பினும், புதன்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160  குறைந்தது. ஆனால், மறுநாள் வியாழக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 அதிரடியாக அதிகரித்தது. இதேபோல், நேற்று வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 54,720-க்கும், கிராமுக்கு ரூ. 40 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 6,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று அதிரடியாக சரிந்து இருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. 

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,520 குறைந்து ஒரு சவரன் ரூ. 53,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 190 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6,650-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,255-க்கும், ரூ. 58,040-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இதேபோல், வரலாறு காணாத உச்சத்தை எட்டி வந்த வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ. 4.50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 96 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 96,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Read more ; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த தாதுக்கள் அவசியம்..!! கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்..

English Summary

Gold prices have been hitting all-time highs for the past few weeks, but today’s drastic fall has come as a pleasant surprise to jewelery lovers.

Next Post

'10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் வசம் சென்ற எதிர்கட்சி பதவி!!' மக்களவை எதிர்க்கட்சித் தலைவருக்கான அதிகாரங்கள் என்ன?

Sat Jun 8 , 2024
The seat of Leader of Opposition in Lok Sabha has gone to Congress. Let's see what are the powers of the Leader of Opposition.

You May Like