fbpx

உறவுக்கார பெண்ணை 5 ஆண்டுகளாக சீரழித்த காவல் ஆய்வாளர்..!! பலமுறை கருக்கலைப்பு..!! பகீர் சம்பவம்

கடந்த 5 ஆண்டுகளாக தனது உறவினரை பாலியல் பலாத்காரம் செய்து பலமுறை கருக்கலைப்பு செய்ய வைத்ததற்காக காவல்துறை ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் காவல்துறை ஆய்வாளர் ஜி. பி. உமேஷ் என்பவர் மீது 25 வயது பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில், ’தங்கள் குடும்பத்தில் நிலத் தகராறு நிலவி வருவதாகவும், தனது தாயின் வேண்டுகோளின் பேரில் உமேஷ் காவல்துறை ஆய்வாளராக நியமிக்கப்பட்டு 2017இல் இப்பிரச்சனையை தீர்க்க உதவினார் என்றும் குறிப்பிட்டுள்ளார். பின்னர், தன்னை சந்திக்க வருமாறு அந்த பெண்ணை உமேஷ் அழைத்துள்ளார். இதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு, செப்டம்பர் 13ஆம் தேதி அன்று உமேஷை சந்திக்கச் சென்றபோது, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதை யாரிடமும் சொல்ல வேண்டாம், இல்லையெனில் குடும்பத்தையே அழித்துவிடுவேன் என மிரட்டி உள்ளார்.

உறவுக்கார பெண்ணை 5 ஆண்டுகளாக சீரழித்த காவல் ஆய்வாளர்..!! பலமுறை கருக்கலைப்பு..!! பகீர் சம்பவம்

உமேஷ் தனக்கு அடிக்கடி போன் செய்வதாகவும், ஆனால், போன் காலை ஏற்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். கடைசியாக, அவரது வீட்டிற்கே சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். உமேஷுக்கு பயந்து பயந்து, பாதிக்கப்பட்ட பெண் வேறு இடத்தில் பணி செய்திருக்கிறார். ஆனால், அங்கும் வந்து அந்த பெண்ணை பாலியல் வச்ன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார் உமேஷ். அவருக்கு ஏற்கனவே, இரண்டு மனைவிகள் உள்ளனர். மேலும், தன்னை மூன்றாவது மனைவியைப் போல கூட வாழச் சொன்னதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். அக்டோபர் 2, 2021 அன்று சுகாதார மையத்தில் கருக்கலைப்பு செய்ததாகவும் மேலும், உமேஷ் தன்னை பலமுறை வற்புறுத்தி மாத்திரைகள் சாப்பிட வைத்து கருவை கலைக்க வைத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

உறவுக்கார பெண்ணை 5 ஆண்டுகளாக சீரழித்த காவல் ஆய்வாளர்..!! பலமுறை கருக்கலைப்பு..!! பகீர் சம்பவம்

தன்னைக் விட்டுவிடும்படி உமேஷிடம் அந்தப் பெண் பலமுறை கெஞ்சி இருக்கிறார். ஆனால், அவரின் அட்டூழியம் தொடர்ந்து வந்துள்ளது. மாறாக, அவர் தனக்குக் கீழ்ப்படியவில்லை என்றால், மீண்டும் ஒரு முறை நிலத் தகராறு பிரச்சனையை தொடங்கி அவரடைய பெற்றோரை ரோட்டில் வர வைப்பேன்’ என எச்சரித்துள்ளார். இதையடுத்து, காவல்துறை ஆய்வாளராக உள்ள உமேஷ், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இன்னும் கைது செய்யப்படவில்லை.

Chella

Next Post

16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்..!! அமைச்சரின் மகனுக்கு தொடர்பு..? வெளியான திடுக்கிடும் தகவல்

Tue Oct 25 , 2022
16 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் மாநில பாஜக அமைச்சரின் மகனுக்கும் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். திரிபுரா மாநிலம் உனோகோட்டி மாவட்டம் குமார்ஹட் பகுதியில் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பெண், தனது மகளை கடந்த 19ஆம் தேதி உனோகோட்டி […]
16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்..!! அமைச்சரின் மகனுக்கு தொடர்பு..? வெளியான திடுக்கிடும் தகவல்

You May Like