fbpx

தீவிரவாதிகளால் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை!… மணிப்பூரில் அடுத்தடுத்து பயங்கரம்!

மணிப்பூரில் தீவிரவாதிகளால் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரின் மோரே நகரில் சிங்தம் ஆனந்த் சப்-டிவிசனல் என்பவர் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் மோரே நகரில் எல்லை பாதுகாப்பு படைக்காக ஹெலிகாப்டர்கள் தரையிறங்க ஏதுவாக ஹெலிபேட் வசதி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஹெலிபேடை ஆய்வு செய்ய போலீஸ் அதிகாரி சென்றார். அப்போது அவர் மீது மர்மநபர்கள் பதுங்கி இருந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, மோரேயில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிக்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இந்த தாக்குதலில் 3 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து முதல்வர் பைரேன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், குற்றவாளிகளை கண்டுபிடித்து விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என உறுதியளித்தார். கடந்த மே 3 அன்று பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக மைத்தேயி, குக்கி இன மக்கள் இடையிலான இன வன்முறையில் இருந்து மணிப்பூர் மாநிலம் தொடர்ந்து பல சிக்கலை சந்தித்து கொண்டிருக்கும் வேளையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த இன மோதலில் மாநிலத்தில் 200 -க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

தொடங்கியது நவம்பர்..!! வாடிக்கையாளர்களே மறந்துறாதீங்க..!! மொத்தம் 14 நாட்கள் விடுமுறை..!!

Wed Nov 1 , 2023
நவம்பர் மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில், வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளுக்கு பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். வார இறுதி நாட்களுக்கான விடுமுறை நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். ஆனால், பண்டிகை விடுமுறைகள் மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபடும். அந்த வகையில், தற்போது நவம்பர் மாதத்திற்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. […]

You May Like