fbpx

நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்.. டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்…

நீட் இளநிலை தேர்வை ஒத்திவைக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.. நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டு இளங்கலை மருத்துவத்தில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் 2022 தேர்வு, ஜூலை 17-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் நேற்று வெளியிடப்பட்டது.. கடந்த ஆண்டை போலவே ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது..

இதனிடையே நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை 17-ம் தேதிக்கு முன்னதாக பட்டியலிடுவதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.. நாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.. எனவே நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

இந்நிலையில், நீட் இளநிலை தேர்வை ஒத்திவைக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவசர வழக்காக மனுவை விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.. ஒரே நேரத்தில் பல தேர்வுகள் நடைபெறுவதால் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.. மேலும் ஒத்திவைக்க பிரதமர் மோடி மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கும் #NEETUG2022Postponement, #PostponeNEETUG2022 ஆகிய ஹேஷ்டேக்குகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகின்றன.. எனினும் சமீபத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் இளநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

இரவில் இயங்கும் கடைகளை மூட காவலர்கள் வற்புறுத்தக் கூடாது..!! தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி..!!

Wed Jul 13 , 2022
இரவில் இயங்கும் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களை மூடுமாறு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வற்புறுத்தக் கூடாது என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947-ன்படி 10க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்திய கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 × 7 அனைத்து நாட்களிலும் இயங்கலாம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றமும் […]
அரிசி மீதான ஜிஎஸ்டி வரி..! ஓட்டல்களில் இட்லி, தோசை போன்ற உணவு வகைகளின் விலை மேலும் உயருகிறது..!

You May Like