fbpx

பரபரக்கும் அரசியல் களம்..!! வரும் 6ஆம் தேதி எல்லோரும் வந்துருங்க..!! அதிரடியாக உத்தரவுப்போட்ட எடப்பாடி பழனிசாமி..!!

2026 தேர்தலை எதிர்கொள்ள இப்போதே அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து பணிகளை தொடங்கியுள்ளது. 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை திமுக மேலிடம் நியமனம் செய்து பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

அடுத்தகட்டமாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 234 தொகுதிகளுக்கும் சூறாவளி சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் விஜய் விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார். இதன் காரணமாக தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

திமுக, அதிமுக கூட்டணிகளில் உள்ள தோழமைக் கட்சிகளும் 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க தங்களை தயார்படுத்த தொடங்கியுள்ளன. இந்நிலையில், அதிமுகவும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு பல புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கட்சியில் நிர்வாகிகள் மாற்றம் பற்றி விரைவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர தேர்தல் கூட்டணி, பிரச்சாரம் தொடர்பாகவும் முக்கிய முடிவுகளை எடுக்க எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இது தொடர்பாக ஆலோசனை நடத்த அவர் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளார். அதன்படி வரும் 6ஆம் தேதி (புதன்கிழமை) அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் வருகிற 6ஆம் தேதி காலை 10 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த, மாநிலக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Read More : தீபாவளி அன்றே இப்படி நடக்கணுமா..? கமல் குடும்பத்திற்கு வந்த சோகம்..!! திடீரென மருத்துவமனையில் அட்மிட்டான சாருஹாசன்..!!

English Summary

AIADMK district secretaries meeting will be held on 6th (Wednesday).

Chella

Next Post

பேங்க் ஆப் பரோடா வங்கியில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாத சம்பளம் ரூ.40,000..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Fri Nov 1 , 2024
Bank of Baroda has published a notification to fill 592 vacancies.

You May Like