fbpx

மொரோக்கோ நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!… ரிக்டர் அளவில் 7ஆக பதிவு!… 296 பேர் உயிரிழந்ததாக தகவல்!

மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி 296 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொரோக்கோ நாட்டின் மாரேஷ் என்ற பகுதியில் முதற்கட்டமாக இரவு 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாகவும் இந்த நிலநடுக்கம் மரகேஷிலிருந்து (Marrakech) தென்மேற்கே திசையில் 44 மைல் (71 கிலோமீட்டர்) தொலைவில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பின்னர் மீண்டும் இன்று அதிகாலை 03.14 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மராகேச் என்ற இடத்தில் இருந்து 79 கி.மீ தூரத்தை மையமாக கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டேர் அளவுகோலில் 7 என்ற அளவில் பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கம் சுமார் 20 நொடிகள் நீடித்ததாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளால் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் பொதுமக்கள் சிக்கி 296 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இடிபாடுகளில் மக்கள் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Kokila

Next Post

முதல் வெற்றியை ருசித்தது இந்தியா கூட்டணி..! உ.பி.யில் ஆளும் பாஜகவை வீழ்த்தியது இந்தியா கூட்டணி..!

Sat Sep 9 , 2023
கேரளா, மேற்குவங்கம், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரகண்ட், திரிபுரா ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்றைய தினம் நடைபெற்றது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணிக்கும் இடையே நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் இது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இடைத்தேர்தலில் இந்தியா […]

You May Like