தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள கீழக்கோட்டை கிராமத்தில் இருக்கின்ற தேவாலயம் ஒன்றில் வினோத் ஜோஸ்வா என்ற நபர் பாதிரியாராக பணிபுரிந்து வருகிறார். இத்தகைய நிலையில் அந்த தேவாலயத்திற்கு பாட்டு வகுப்புக்காக வந்த பெண்ணை பலமுறை அவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். 14 வயது முதலே அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
தற்சமயம் அந்தப் பெண் திருமணமாகி கர்பமாக இருக்கின்ற நிலையில் வினோத் ஜோஸ்வா அந்த பெண்ணை whatsapp மூலமாக தொடர்பு கொண்டு மீண்டும் அந்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் வழங்கியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார் இந்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வினோத் ஜோஸ்வாவை பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, அவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.