தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றன. அது ஒரு புறம் வருத்தம் அளித்தாலும், இது போன்ற தவறுகளில் ஈடுபடுவார்கள் தங்களுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் தவறு செய்தால் அவர்களால் பாதிக்கப்படுபவர்கள் விவரம் அறிந்த பெண்களாக இருந்தாலும் கூட பரவாயில்லை. ஆனால் எதுவுமே தெரியாத பள்ளிக்கு செல்லும் மாணவிகளை சீரழிப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகர் காட்டன் பஜார் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் 28 சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் அவருக்கு திருமணமாகி ஏற்கனவே 2 குழந்தைகள் இருக்கின்ற நிலையில் அவர் பணியாற்றும் நிறுவனத்தில் கொரோனா காலகட்டத்தில் அக்ரஹாரம் மலைமேடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி வேலைக்கு சேர்ந்து சில மாதங்கள் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்த சூழ்நிலையில்தான் சுந்தர்ராஜனுக்கும் அந்த சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அதன் பிறகு சிறுமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு மறுபடியும் லாலாபேட்டையில் இருக்கின்ற அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து 10ம் வகுப்பு பள்ளி படிப்பை தொடர்ந்து வந்தார். இதற்கு நடுவே கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் தெரிவித்து ஓட்டுநர் சுந்தர்ராஜ் அவரை வெளியூருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
வெளியூருக்கு அழைத்துச் சென்ற சுந்தர்ராஜ் அங்கே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் இதனைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் தங்களுடைய மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன் பிறகு பள்ளி மாணவி மற்றும் தனியார் நிறுவன ஓட்டுநர் சுந்தர்ராஜ் இருவரையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இருவரும் ராணிப்பேட்டை அகமது மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், காவல் ஆய்வாளர் வாசுகி அந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுனர் சுந்தர்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலூர் மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்.