fbpx

நீட் தேர்வால் மாணவன் தற்கொலையா? நீட் பயிற்சி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நீட் பயிற்சி எடுத்து வந்த மாணவன் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேவுள்ள அம்மம்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த மாணவன் சந்துரு. இந்த மாணவன் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து வந்தார். மேலும் டாக்டராக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையத்திலும் சேர்ந்து அந்த தேர்வுக்கான பயிற்சியும் எடுத்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் திடீரென அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மாணவனின் உடலை கைப்பற்றிய காவல் துறை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருகிறது. நாடெங்கிலும் நீட் தேர்வு நடைபெறும் நேரங்களில் இது தொடர்பான தற்கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மாணவர்களும் மாநில அரசும் வீட்டிற்கு எதிராக எவ்வளவு போராட்டங்களை நடத்தினாலும் மத்திய அரசு நீட் தேர்வு ரத்து செய்ய மறுத்துக் கொண்டே தான் இருக்கிறது. மக்களிடம் நீட் தேர்வு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். 2017 ஆம் ஆண்டில் மட்டும் 20 மாணவர்கள் இந்தத் தேர்வின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

Baskar

Next Post

2 குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொன்றுவிட்டு தாய்-தந்தை தற்கொலை..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

Mon Mar 27 , 2023
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் குஷைகுடா பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் சதீஷ் – வேதா தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு நிஷிகேத் (9), நிஹால் (5) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். விடுமுறை நாள் என்றாலும் பிற்பகலாகியும் இவர்களது வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசர், கதவை உடைத்துசென்று பார்த்த போது, சதீஷ் உள்பட அவரது […]

You May Like