fbpx

பள்ளிக்கு சென்ற சிறுவனை கடித்து குதறிய வெறிநாய்..!! திருப்பத்தூரில் அதிர்ச்சி..!!

பள்ளிக்கு சென்ற சிறுவனை வெறிநாய் கடித்து குதறிய சம்பவம் திருப்பத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஹாரிப் நகர் பகுதியைச் சேர்ந்த தாஹித் என்பவரின் மகன் அத்திக் (7). இந்த சிறுவன் நேற்றைய தினம், பள்ளியின் அருகில் உள்ள கடைக்குச் சென்று சாக்லேட் வாங்கிக் கொண்டு பள்ளிக்கு உள்ளே சென்றபோது, வீதியில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று சிறுவன் அத்திக்கை கடித்துக் குதறியது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஓடிவந்து, அந்த நாயை விரட்டி சிறுவனை மீட்டனர்.

பின்னர், சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்றனர். தற்போது, அந்த சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறான். மேலும் அந்த பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிவதாகவும், இதன் காரணமாக அவ்வழியாக செல்லகூடிய குழந்தைகளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த அச்சத்துடனும் பயணித்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும், மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, இனியாவது நகராட்சி நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு உடனடியாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More : தமிழ்நாட்டின் ஓசூரை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும்..!! இல்லையென்றால்..!! மிரட்டல் விடுக்கும் வாட்டாள் நாகராஜ்..!!

English Summary

A boy who went to school was bitten by a rabid dog has caused a shock in Tiruppathur.

Chella

Next Post

பத்ம விருதுக்கு செப்.15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...!

Wed Sep 4 , 2024
Applications for Padma Awards-2025 can be submitted till September 15, 2024.

You May Like