Smoking: ஆஸ்திரியாவில் 30 ஆண்டுகளாக புகைப்பிடித்து வந்த 52 வயது நபருக்கு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கேஸ் ரிப்போர்ட்ஸின் அறிக்கையின்படி , ஆஸ்திரேலியாவில் 52 வயதான நபர் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து புகை பிடித்தது வருவதாக கூறப்படுகிறது. அந்த நபர் நாள்தோறும் ஒரு பாக்கெட் சிகரெட் பிடித்து வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த 2007ம் ஆண்டு மூச்சு விடுவதில் சிரமம், கடுமையான இருமல் போன்ற காரணங்களால் மருத்துவரை அனுகி உள்ளார். அப்போது அந்த நபரின் தொண்டை பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 16 ஆண்டுகளாக மருத்துவரை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது அந்த நபர் கடுமையான தொண்டை வலியால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் தொண்டை பகுதியில் சுமார் 2 அங்குலம் முடி வளர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிவித்தனர். தொண்டையில் வளர்ந்துள்ள முடியை அறுவை சிகிச்சை மூலமாக 14 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீக்கிவிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மீண்டும் முடி வளர்ந்தால், 14 ஆண்டுகளுக்குப் பிறகு அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Readmore: கோலிக்கு என்னாச்சு?. தொடர்ந்து தடுமாற்றம்!. ரசிகர்கள் சோகம்!.