ஈரோடு அருகே உள்ள அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு அருகே உள்ள அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயிலில் அர்ச்சகர், சீட்டு விற்பனையாளார், இரவுக்காவலர், திருவலகு ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு. கல்வி மற்றும் பிற தகுதிகள்: அர்ச்சர் பணிக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள் நடத்துகின்ற ஏதேனும் ஆகமப்பயிற்சி மையத்தில் தொடர்புடைய பிரிவில் ஓராண்டு பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சீட்டு விற்பனையாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும். இரவுக்காலவர், திருவலகு பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி? இதற்கு தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது அஞ்சலிலோ அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: செயல் அலுவலர், அருள்மிகு கொங்கலம்மன் திருக்கோயில். ஈரோடு – 638 001,தொடர்புக்கு – 0424 – 2214421, விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.06.2023 ஆகும்.