fbpx

வெடித்தது கலவரம்..!! 144 தடை உத்தரவு..!! இணைய சேவைகளும் துண்டிப்பு..!! பெரும் பரபரப்பு..!!

ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு மனோகர் லால் கட்டார் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் அருகே உள்ள மேவாட் என்ற இடத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் நேற்று முன்தினம் ஊர்வலம் நடத்தினர். அப்போது, இரு தரப்பினரிடையே வன்முறை வெடித்து பின்னர் கலவரமாக மாறியது.

இதையடுத்து, குழந்தைகள் உள்பட சுமார் 2,500 பேர் கோயிலில் தஞ்சமடைந்துள்ளனர். சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவத்தில் ஊர் காவல் படையைச் சேர்ந்த இரு காவலர்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், காவலர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து, நேற்று பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், ஹரியானாவில் உள்ள குருகிராம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கலவரம் ஏற்பட்ட நூ மாவட்டத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இணைய சேவைகளும் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்து வீடுகளில் முடங்கியுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டதாக 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 44 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Chella

Next Post

ஹைதராபாத்தில் WWE போட்டிகள்..!! தேதியும் குறிச்சிட்டாங்களாமே..!! மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

Wed Aug 2 , 2023
ஹைதராபாத்தில் WWE போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ப்ரோ மல்யுத்த உலகில் WWE ஒரு உலகளாவிய மாபெரும் நிறுவனமாக இருந்து வருகிறது. அவர்கள் பல்வேறு சந்தைகளில் பல ஆண்டுகளாக சர்வதேச அளவில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தி உள்ளனர். WWE போட்டிக்கான முக்கிய வெளிநாட்டு சந்தைகளில் இந்தியாவும் ஒன்று. இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி WWE போட்டிகள் நடத்த […]

You May Like