fbpx

வாவ்..! விவசாயம் செய்யும் மகளிருக்கு ரூ.5 லட்சம் மானியம் வழங்கும் திட்டம்…! முழு விவரம்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் குறைந்த வட்டியில் வங்கிக் கடனுதவி பெற்றுப் பயனடையலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலமாக குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது.

நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத்தொகையில் 50% அல்லது அதிகப்பட்சம் ரூ.5 இலட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானியத்தொகை போக எஞ்சிய கிரையத் தொகையினை தேசிய பட்டியலினத்தோர் நிதி மேம்பாட்டுக் கழக நிதியிலியிருந்து பயனாளிகளுக்கு 6% மிக குறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாட்கோ அவர்களை 94450 29473 என்ற கைப்பேசி எண்ணில் அணுகி, விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

English Summary

A scheme to provide subsidy of Rs. 5 lakh to female farmers

Vignesh

Next Post

வேகமாக பரவும் கொடிய மார்பர்க் வைரஸ்!. 300 பேர் பாதிப்பு!. WHO எச்சரிக்கை!. அறிகுறிகள் இப்படிதான் இருக்கும்!

Wed Oct 2 , 2024
What Is The Ebola-Like Marburg Virus in Rwanda That Has Killed 8 People?

You May Like