கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்பட்டு வரும் ரேஷன் கடைகளில் காலியாக இருக்கின்ற விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் பதவிகளுக்கு நேர்காணல் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்சமயம் வெளியிடப்பட்டிருக்கிறது. விண்ணப்பதாரர்கள் அவரவர் மாவட்ட கூட்டுறவு சங்க ஆள் சேர்ப்பு அலுவலகம் தொடர்பான இணையதளத்திலிருந்து இதனை பதிவிறக்கம்செய்து கொள்ளலாம்.
இந்த பதவிகளுக்கு கல்வி தகுதி மற்றும் நேர்காணல் தேர்வு உள்ளிட்டவற்றில் அவரவர்கள் வாங்கிய ஒட்டுமொத்த மதிப்பெண்களை அடிப்படையாக வைத்தும், அந்தந்த வகுப்புதாரர் சார்ந்து இருக்கின்ற இன சுழற்சியினை அடிப்படையாகக் கொண்டும் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடக்கும் நேரம், இடம், தேதி உள்ளிட்ட விபரங்கள் தேர்வு ஹால் டிக்கெட்டில் வழங்கப்பட்டிருக்கும். ஹால் டிக்கெட் இல்லாத விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உங்கள் மாவட்டம் எதுவோ, அதன் லிங்கை கிளிக் செய்து உங்களுடைய ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.