fbpx

கடற்கொள்ளையர்களின் தொடர் அட்டூழியம்!… 3வது முறையாக கடத்தல் முயற்சியை முறியடித்த இந்திய கடற்படை!

சோமாலியா கடற்கரையில் கடற்கொள்ளையர்களால் கடத்த முயன்ற இலங்கை மீன்பிடி படகை துரிதமாக நடவடிக்கை எடுத்து இந்திய கடற்படை மீட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த மோதல்கள் வணிக கப்பல்களை நோக்கியும் திரும்பியுள்ளன. ஏடன் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் வரும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. இதைத் தடுக்க அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுத்தாலும் கூட இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதேபோல் இஸ்ரேல் ஹமாஸ் போருக்குப் பிறகு மத்திய கிழக்குப் பகுதி அருகே வரும் கப்பல்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் அந்த கப்பல்கள் கடத்தப்படும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சோமாலியா கடற்கரையில் இலங்கை மீன்பிடி இழுவை படகைக் கடற்கொள்ளையர்கள் கடத்த முயன்றுள்ளனர். அப்போது சரியான நேரத்தில் சென்ற இந்தியக் கடற்படை அவர்களுக்கு உதவியிருக்கிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் முறியடிக்கப்பட்ட மூன்றாவது கடத்தல் முயற்சி இதுவாகும். இந்தியக் கடற்படை அளித்த முக்கிய தகவல்களின் உதவியுடன் சீஷெல்ஸ் கடற்படையே கடத்தப்பட்ட கப்பலை செஷல்ஸில் அருகே தடுத்து நிறுத்தியுள்ளனர். அந்த படகில் ஆறு பணியாளர்கள் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இப்போது அந்த கப்பல் சீஷெல்ஸில் உள்ள மாஹேவுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்தியக் கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இலங்கை மீன்பிடிக் கப்பல் கடத்தப்பட்ட தகவல் கிடைத்தவுடன் இந்தியக் கடற்படை செஷல்ஸ் பாதுகாப்புப் படை மற்றும் இலங்கை கடற்படையுடன் இணைந்து துரிதமாக நடவடிக்கை எடுத்ததில் கடத்தப்பட்ட கப்பல் வெற்றிகரமாக இடைமறித்து மீட்கப்பட்டது” என்று அதில் கூறப்பட்டுள்ளது. மத்திய கிழக்கைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு நாட்களில் இந்தியக் கடற்படையின் மூன்றாவது கடத்தல் தடுப்பு நடவடிக்கை இதுவாகும்.

முன்னதாக கடந்த திங்கள்கிழமையன்று சோமாலியாவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதியில் இருந்து அல் நயீமி என்ற மீன்பிடிக் கப்பலைக் கடத்த ஆயுதம் ஏந்திய சோமாலியா கடற்கொள்ளையர்கள் 11 பேர் முயற்சி செய்தனர். அப்போது ரோந்துப் பணியில் இருந்த ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் துரிதமாக செயல்பட்டு ஈரானிய மீன்பிடி கப்பலை மீட்டது. அதிலிருந்த 19 பேரும் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

குவிந்து கிடக்கும் அந்தரங்க புகைப்படங்கள்..!! அதிர்ச்சியில் திகைத்த நீதிபதி..!! ஐகோர்ட்டை அலறவிட்ட பெண்..!! நடந்தது என்ன..?

Wed Jan 31 , 2024
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்த்தி என்பவர் ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”எனக்கும் விவேக்ராஜ் என்பவருக்கும் திருமணமாகி சேர்ந்து வாழ்ந்து வந்தோம். எனது கணவரின் செல்போனை பார்த்த போது அதில் பல பெண்களிடம் ஆபாச வீடியோ கால் ஸ்கிரீன்ஷாட் மற்றும் அந்தரங்க உறுப்புகளின் புகைப்படங்களை வைத்திருந்தார். தனது கணவர் வங்கியில் வேலை பார்ப்பதால் அங்கு வரும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் பேசி சுமார் […]

You May Like