அக்டோபர் 1 முதல், தென் மற்றும் வட இந்திய மாநிலங்களில் சிமெண்ட் விலை உயர்வாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் வரை விலை உயரும் என்று கூறப்படுகிறது.
செப்டம்பர் மாத தொடக்கத்திலும் சிமெண்ட் விலை மூடைக்கு ரூ.10 முதல் ரூ.35 வரை உயர்த்தப்பட்டது. அப்போது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சிமெண்ட் விலை கடுமையாக உயர்ந்தது. அதேபோல, ஆகஸ்ட் மாதத்திலும் சிமெண்ட் விலை மாதாந்திர அடிப்படையில் 1 முதல் 2 சதவீதம் வரை அதிகரித்தத். சிமெண்டுக்கான தேவை அதிகரித்துள்ளதே சிமெண்ட் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சிமெண்ட் விலை உயர்வால் இரண்டாம் காலாண்டில் நிறுவனங்களின் லாபம் (EBITDA) நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சிமெண்ட் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். அக்டோபர் 1 முதல் தென்னிந்திய மற்றும் வட இந்தியாவில் சிமெண்ட் விலை ஒரு மூடைக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை விலை அதிகரிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.