fbpx

பெற்ற தாயை கவனிக்காத மகன்..!! மனைவி, குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேற உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

மும்பையில் உள்ள பரேல் என்ற இடத்தில் சம்படா ஹைட்ஸ் என்ற கட்டடத்தில் வசிப்பவர் துகாராம். இவர் வசிக்கும் வீடு அவரின் தாயார் பெயரில் உள்ளது. துகாராமும் அவரின் மனைவியும் சேர்ந்து துகாராமின் தாயாரை மிகவும் மோசமாக நடத்தியுள்ளனர். இதனால் தனது பெயரில் இருக்கும் வீட்டில் இருந்து தன் மகனை காலி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி துகாராமின் தாயார் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த தீர்ப்பாயம், கடந்தாண்டு ஜூன் மாதம் துகாராமை வீட்டில் இருந்து வெளியேற உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் துகாராம் வழக்குத் தொடர்ந்தார். இம்மனு நீதிபதி சந்தீப் முன்பு விசாரணைக்கு வந்தது. துகாராம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், துகாராம் தங்குவதற்கு வேறு வீடு இல்லை என்றும், மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் அவர் எங்கு செல்ல முடியும் என்றும், மனுதாரர் தொடர்ந்து தனது தாயாரை நல்ல முறையில் கவனித்துக்கொள்வார் என்றும் வாதிட்டார்.

ஆனால், தாயார் தரப்பில், “தீர்ப்பாயத்தில் ஆஜரானபோது மனுதாரர் சஹாப்பூரில் ஒரு படுக்கை கொண்ட வீடு வாங்கி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அதோடு மனுதாரர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். தன் தாயாரை சரியாக கவனித்துக்கொள்ளாமல் மோசமாக நடத்தியுள்ளார். அதோடு தாயார் வங்கிக்கணக்கில் இருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டுள்ளார். எனவே, துகாராம் தன் தாயார் பெயரில் இருக்கும் வீட்டிலிருந்து காலி செய்ய உத்தரவிடவேண்டும்” என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ”துகாராம் தனது தாயார் பெயரில் உள்ள வீட்டை காலி செய்ய வேண்டும். தன்னுடன் யார் இருக் கவேண்டும் என்பதை துகாராம் தாயார்தான் முடிவு செய்ய வேண்டும். வீட்டிற்கு அவர்தான் உரிமையாளர். அதோடு துகாராம் தனது தாயாரின் செலவுக்கும் ஒவ்வொரு மாதமும் பணம் கொடுக்க வேண்டும். துகாராம் தங்குவதற்கு வேறு வீடு பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

Chella

Next Post

’உடலுறவின்போது திடீரென ஆணுறையை கழற்றிவிட்டு’..!! மோசமான அனுபவத்தை பகிர்ந்த சன்னி லியோன்..!!

Thu Nov 30 , 2023
அமெரிக்க திரைப்பட நடிகையான சன்னி லியோன், ஆபாச படங்களில் நடித்து அதை வியாபாரமாகவே செய்து வந்தார். அதே துறையில் தன்னுடன் நடித்த ஆபாச நடிகர் டேனியல் வெப்பர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். ஆனால், தான் ஒரு ஆபாச நடிகை என்பதை மறைத்து சக போட்டியாளர்களுடன் பழகி வந்த சன்னிலியோன், அந்த தொழிலை செய்தவர் என்பது […]

You May Like