fbpx

நாட்டை உலுக்கிய ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட பயணிகளுடன் சென்னை வந்த சிறப்பு ரயில்…!

ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த பயணிகளுடன், சிறப்பு ரயில் காலை 4.30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது.

ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தோர், காயமடைந்தோரில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் விபத்தில் சிக்கி இருக்கும் தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த பயணிகளுடன், சிறப்பு ரயில் காலை 4.30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. ரயில் நிலையத்தில் அவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் லேசான காயமடைந்த நபர்களுக்கு அரசு சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Vignesh

Next Post

டீயுடன் இந்த ஸ்நாக்ஸ்களை சேர்த்து சாப்பிடாதீர்கள்!... ஏன் தெரியுமா?... ஆபத்து!

Sun Jun 4 , 2023
டீயுடன் பக்கோடா, இனிப்புகள், சமோசா மற்றும் கச்சோரி போன்ற ஸ்நாக்ஸ்களை சேர்த்து சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு கேடாக அமையும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் காலை எழுந்தவுடன் எத்தனை பேருக்கு ஒரு கப் டீ குடித்தால்தான் நாளே தொடங்குகிறது? சிலருக்கு மாலை நேரங்களில் சுடசுட ஒரு கப் டீயுடன் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது பிடித்தமானதாக இருக்கும். இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த பானங்களில் ஒன்று டீ. பெரும்பாலானோர் டீயுடன் பிஸ்கட் மற்றும் சாண்ட்விட்ச் போன்றவற்றை சேர்த்து […]

You May Like