fbpx

காதுக்குள் வலை பின்னிய சிலந்தி!… கசப்பான அனுபவத்தை பகிர்ந்த பெண்!… அது இன்னொரு பிரசவ வலிக்கு சமம்!

இங்கிலாந்தில் ஆசிரியை ஒருவரின், காதுக்குள் சிலந்தி வலை பின்னியதால் நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இங்கிலாந்தின் செஷயர் மாவட்டத்தில் உள்ள சேல் பகுதியில் வசித்து வருபவர் லூசி வைல்ட் (29). 3 குழந்தைகளுக்கு தாயான இவர், பகுதி நேரமாக பள்ளி ஆசிரியை ஆகவும், முழு நேரமாக கன்டென்ட் கிரியேட்டராகவும் பணி புரிந்து வருகிறார். அண்மையில் அவர் தனது காதில் சில தொந்தரவுகளால் அவதியடைந்து வந்துள்ளார். இதையடுத்து, காதுகளை சுத்தம் செய்யும் எலெக்ட்ரானிக் உபகரணத்தின் உதவியை நாடினார். ஸ்மார்ட்பட் எனப்படும் அந்த உபகரணம், காதுகளை சுத்தம் செய்ய உதவுவதோடு, அதன் நுனியில் பொருத்தப்பட்ட கேமரா உதவியோடு காதின் உட்புறத்தை ஆராயவும் உதவக்கூடியது.

அதன்படி, இந்த ஸ்மார்ட்பட் வாயிலாக காதுக்குள் ஒரு பூச்சி களேபரம் செய்வதையும், கேமரா உதவியோடு அதனை குட்டி சிலந்தி என்றும் லூசி வைல்ட் கண்டறிந்தார். கைவைத்தியமாக வெதுவெதுப்பான ஆலிவ் எண்ணெயை காதில் வார்த்ததில், அந்த எட்டுக்கால் பூச்சியை வெளியேற்றினார். அதன் பிறகு மருத்துவரை சந்தித்ததில், அவர் இனிமேல் உங்களுக்கு பிரச்சினை இல்லை என்று கூறினர்.

இந்த அனுபவம் குறித்து அப்பெண் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், வழக்கம்போல ஸ்மார்ட்பட் வாயிலாக ஆராய்ந்ததில் கருப்பு நிற பிசிறான பொருளை அடையாளம் கண்டு அதிர்ந்து போனார். காதில் சேரும் அழுக்குக்கு மாறாக வித்தியாசமாக தென்பட்ட அந்த பொருளை கண்டதும், அவசரமாக மருத்துவரை நாடினார். அங்கே அவருக்கு சிக்கலான சிகிச்சை முறையில் காதுக்குள் அடைந்து கிடந்ததை வெளியேற்ற மருத்துவர்கள் முயன்றார்கள். அது இன்னொரு பிரசவ வலிக்கு இணையான சிரமத்தை எதிர்கொண்டதாக அப்பெண் கூறினார்.

அதாவது அவரது காதில் சிலந்தி ஒன்று வலை பின்னி இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்ததாகவும் காதுக்குள் சிலந்தி எப்படி செல்லும், அப்படி சென்றது எதற்காக காதின் உட்புறத்தில் வலை கட்டும். என்பது லூசி வைல்ட் மட்டுமல்ல, அவரை பரிசோதித்து சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் புரியவில்லை என்று அப்பெண் தனது அனுபவத்தை பகிர்ந்தார்.

Kokila

Next Post

"என்னையா கேவலப்படுத்துற.? என்ன செய்றேன் பாரு.? இன்ஸ்டாகிராமில் காதல் வலை.! ஆபாச புகைப்படம் மிரட்டல்.!

Sat Dec 30 , 2023
குஜராத் மாநிலத்தில் தங்களது மேலதிகாரியின் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாக ஒரு பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் குஜராத் சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். குஜராத் மாநிலம் வதோதரா நகரில் உள்ள கார்ப்பரேட் கம்பெனி ஒன்றில் பெண் ஒருவர் பணியாற்றி வந்தார். அந்த கம்பெனியின் மேல் அதிகாரி குறித்த […]

You May Like