நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே இருக்கும் அப்பர் குன்னூர் காவல் நிலையத்தில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் சரவணன்(50). இவருக்கு கல்யாணமாகி இரு பிள்ளைகள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் அதே காவல் நிலையத்தில் விவாகரத்தாகி தனியாக வசித்து வரும் பெண் காவலர் ஒருவரை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை பேசி ஏமாற்றி இருப்பதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக பெண் காவலர் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் அப்பர் குன்னூர் காவல் நிலைய காவல்துறையினர், 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணனை கைது செய்தனர். இவரிடம் விசாரணை செய்த காவல்துறையினர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.